மூத்த குடிமக்கள் நலன்

மூத்த குடிமக்கள் மற்றும் ஆதரவற்ற குழந்தைகளுக்கான ஒருங்கிணைந்த வளாகம் 2011-12ஆம் ஆண்டுக்கான நிதிநிலை உரையில், மூத்த குடிமக்கள் மற்றும் ஆதரவற்ற குழந்தைகளுக்காக அவர்கள் பரஸ்பரம் அன்பையும், பாசத்தையும் பகிர்ந்து கொள்ளும் வகையில் மாநிலத்தின் ஒவ்வொரு வட்டாரத்திலும் சிறப்பு இல்லங்கள் கொண்ட ஒருங்கிணைந்த வளாகம் புகழ்பெற்ற அரசு சாரா நிறுவனங்கள் மற்றும் கூட்டுக்குழும நிறுவனங்கள் தங்கள் நிறுவன சமூகப் பொறுப்புகளின் ஒரு பகுதியின் மூலமாக அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. ஒவ்வொரு ஒருங்கிணைந்த வளாகத்திலும், 25 குழந்தைகள் மற்றும் 25 முதியவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். தற்போது வரை 42 ஒருங்கிணைந்த வளாகங்கள் இத்திட்டத்தை செயல்படுத்துவதற்காக 75:25 என்ற நிதி பங்களிப்பில் மாநில அரசிடம் இருந்து மானியம் பெறுகின்றன.