பெண்கள் திறன் மற்றும் அறிவு பெறுவதினால் அவர்கள் அதிகாரம் அடைவதன் மூலம் பாலின சமத்துவத்தை உறுதிசெய்து அவர்கள் சுதந்திரமாக செயல்பட வழிவகை செய்ய இயலும். பொருளாதார சுதந்திரத்தின் மூலம் மட்டுமே பெண்கள் அதிகாரம் பெற முடியும். ஒரு பெண்ணின் பொருளாதாரத் தேவைகள் பூர்த்தி செய்யப்பட்டால் மட்டுமே, அவள் தன்னை அதிகாரம் பெற்றவளாக கருத இயலும். இதை மனதில் கொண்டு சமூக நலத்துறை இயக்குநரகம் மகளிர் தொழில் கூட்டுறவு சங்கங்கள் மூலம் சமூக-பொருளாதார மேம்பாட்டு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. கூட்டு நடவடிக்கையின் மூலம் கூட்டுறவு என்ற கருத்து இந்த கூட்டுறவு சங்கங்களின் பெண் உறுப்பினர்களின் சமூக பொருளாதார நிலையை மேம்படுத்த உதவுகிறது. இந்த தொழில் கூட்டுறவு சங்கங்களில், சமுதாயத்தில் பின்தங்கிய 18-40 வயதுக்குட்பட்ட பெண்கள் மட்டுமே. உறுப்பினர்களாக முடியும். வறுமைக் கோட்டுக்குக் கீழே உள்ள பெண்கள் இந்தச் சங்கங்களில் உறுப்பினர்களாகப்பட்டு, அவர்களுக்குத் நீடித்த வருமானத்தைப் ‘ அளிக்கும் வேலை வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன.
சமூக நல இயக்குநரகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் 99 மகளிர் தொழில் கூட்டுறவு சங்கங்களும் 1 திருநங்கை தையற்கூட்டுறவு சங்கமும் செயல்பட்டு வருகின்றன. மகளிர் தையல் தொழில் கூட்டுறவு சங்கங்கள், புரட்சி தலைவர் எம்ஜிஆர் சத்துணவு திட்டத்தின் கீழ் பயனடையும் பள்ளிக் குழந்தைகளுக்கும், ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலம் / பிற்படுத்தப்பட்டோர் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலம் மற்றம், சேர்ந்த பள்ளிக் குழந்தைகளுக்கும் சீருடைகள் தைத்து வழங்கும் பணியில் ஈடுபட்டுள்ளன.
ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி பணிகள் சேவைகள் திட்டத்தின் இயக்குநரின் கட்டுப்பாட்டின் கீழ் 25 பெண்கள் இணை உணவு தயாரிக்கும் மகளிர் தொழிற்கூட்டுறவு சங்கங்கள் செயல்பட்டு வருகின்றன. கூட்டுறவு சங்கங்கள் மற்றும் அதில் பதிவு செய்யப்பட்ட உறுப்பினர்களின் விவரங்கள் பின்வருமாறு:
|
வ. எண் |
சங்கங்களின் வகை |
கூட்டுறவு சங்கங்களின் எண்ணிக்கை |
உறுப்பினர்களின் எண்ணிக்கை |
|---|---|---|---|
|
1 |
மகளிர் தையல் தொழில் கூட்டுறவு சங்கங்கள் |
84 |
80,592 |
|
2 |
மகளிர் எழுதுபொருள் தயாரிக்கும் தொழிற்துறை கூட்டுறவு சங்கங்கள் ( தையல் தொழிலிலும் ஈடுபட்டுள்ளனர்) |
15 |
4,428 |
|
3 |
இணை உணவு தயாரிக்கும் மகளிர் தொழிற்கூட்டுறவு சங்கங்கள் |
25 |
1,350 |
|
4 |
திருநங்கையர் தையற் தொழிற்கூட்டுறவு சங்கம் |
1 |
68 |
|
மொத்தம் |
125 |
86,438 |
இலவச சீருடை விநியோகத்தின் கீழ் வழங்கப்படும் சீருடையின் நிறங்கள்:
|
சீருடை வகைகள் |
சீருடை நிறம் |
|---|---|
|
சிறுவர்கள் - அரை பேன்ட் முழு பேன்ட் |
கரும்பச்சை டிரில் சந்தன நிறம் டிரில் |
|
சிறுவர்கள் – சட்டை 1 - 5 வகுப்பு 6 - 8 வகுப்பு |
கரும் பச்சை கட்டம் சந்தன நிறம் கட்டம் |
|
பெண்கள் - 1 - 5 வகுப்பு –அரைபாவாடை சட்டை |
கரும்பச்சை கேஸ்மெண்ட் இளம் பச்சை கட்டம் |
|
பெண்கள்- 6 - 8 வகுப்பு – சல்வார் கம்மீஸ் மேல்சட்டை காலர் கோட் |
சந்தன கேஸ்மெண்ட் சந்தன கட்டம் சந்தன கேஸ்மெண்ட் |
நீலகிரி போன்ற மலைப் பகுதிகளில் உள்ள குழந்தைகளுக்கு வழங்கப்படும் சிறப்பு சீருடைகள்:
நீலகிரி உள்ளிட்ட மலைப்பகுதிகள் கொண்ட 16 மாவட்டங்களின் மலைப்பகுதி பள்ளிகளில் PTMGR சத்துணவு திட்டத்தின் கீழ் பயனடையும் 1 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு முழு கை சட்டையுடன் கூடிய முழு பேண்ட் மற்றும் மாணவியருக்கு முழு சல்வார் கமீஸ் மற்றும் துப்பட்டா வழங்கப்படுகிறது.
4 செட் சீருடைகளை தைக்க தேவையான தையல் திறனை பூர்த்தி செய்ய, சங்கங்களில் இணை உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது. சல்வார் கமீஸ் மற்றும் முழு பேண்ட் தைப்பது குறித்து பயிற்சி பெண் உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
மாவட்ட மற்றும் மாநில அளவில் சிறந்த சங்கம் தேர்வு செய்தல்:
தமிழ்நாடு கூட்டுறவு சங்கம் ஒவ்வொரு ஆண்டும் மாநில அளவிலும், மாவட்ட அளவிலும் சிறந்த சங்கத்திற்கான கோப்பை வழங்கி வருகிறது.






