தமிழ்நாடு மாநில மகளிர்ஆணையம்
பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான வழக்குகளைக் கையாள்வதற்காக சட்டப்பூர்வ அமைப்பான தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையம் 1993 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. ஒரு தலைவர் மற்றும் 9 உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மகளிர் ஆணையம், பெண்கள் சார்ந்த பிரச்சனைகளை ஆராய்ந்து பெண்கள் பிரச்சனைகள் தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்கிறது. பெண்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கும், குடும்பங்கள் மற்றும் சமூகத்திற்குள் அவர்கள் எதிர்கொள்ளும் அனைத்து வகையான துன்புறுத்தல்கள் மற்றும் பிரச்சனைகளுக்கு எதிராக பெண்களுக்கு சமத்துவம் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் தேவையான அதிகாரங்கள் மகளிர் ஆணையத்திற்கு வழங்கப்பட்டுள்ளன. பெண்கள் தொடர்பான சட்டங்கள் குறித்த விழிப்புணர்வு மக்களிடையே ஏற்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை இவ்வாணையம் மேற்கொண்டு வருகிறது.
ஆணையத்தின் நோக்கங்கள்:-
-
பெண்களின் பாதுகாப்பு மற்றும் நலனை உறுதிப்படுத்துதல்.
-
பாலின சார்ந்த பிரச்சினைகளை தீர்த்தல்.
-
பெண்கள் தொடர்பான பல்வேறு பிரச்னைகள் குறித்து அரசுக்கு பரிந்துரை செய்தல்.
மகளிர் ஆணையத்தின் செயல்பாடுகள்
1.அரசியலமைப்பின் கீழ் வழங்கப்பட்டுள்ள விதிகள் மற்றும் பாதுகாப்புகளைப் பின்பற்றுதல் மற்றும் பெண்களுக்கான சட்டங்கள் ஆய்வு செய்தல்.
2.பெண்களுக்கான பாதுகாப்பு நடவடிக்கைகளை பல்வேறு நிறுவனங்கள் திறம்பட செயல்படுத்தப்படாதபோது அரசுக்கு புகார் தெரிவித்தல்.
3.பெண்களுக்கு நீதி வழங்கத் இயலாதபோது சட்ட விதிகளில் திருத்தங்களை பரிந்துரைத்தல்.
4.பெண்களின் உரிமை மீறல் தொடர்பான பிரச்சனைகளை சுட்டிக்காட்டுதல் மற்றும் சம்பந்தப்பட்ட அலுவலர்களுடன் தொடர் நடவடிக்கை எடுத்தல்.
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் கீழ் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ள பெண்களுக்கான உரிமைகளை மீறுதல் மற்றும் அவர்களின் பாதுகாப்பு நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்தாதது போன்ற புகார்களை பெண்கள் நேரடியாக மகளிர் ஆணையத்தை அணுகி தீர்வு பெறலாம்.
மேலும் விவரங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரியில் தொடர்பு கொள்ளலாம்:
தலைவர்:: திருமதி. A.S. குமாரி நேரடி தொலைபேசி:: 28551155.
முகவரி விவரம்:
தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையம்
கலாஸ் மஹால், 1வது தளம்,
சேப்பாக்கம், சென்னை 600005.
தொலைபேசி: 044 - 28592750,044-28551155
தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையச் சட்டம், 2008, (தமிழ்நாடு சட்டம் 31/ 2008) -ன் பிரிவு 3 இன் துணைப் பிரிவுகள் (1) மற்றும் (2) மூலம் வழங்கப்பட்ட அதிகாரங்களின் படி, தமிழ்நாடு ஆளுநர் அவர்களால் தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையம் அமைக்கப்பட்டு பின்வரும் நபர்களை ஆணையத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
|
திருமதி. A.S. குமாரி, எண்.5/9, இந்திராணி தெரு, அய்யாவு காலணி, அமிர்ஞ்சிக்கரை, சென்னை மாவட்டம், |
தலைவர் |
|---|---|
|
டாக்டர். மாலதி நாராயண சாமி, சேலம் மெயின் ரோடு, உத்தங்கரை, கிருஷ்ணகிரி மாவட்டம். |
உறுப்பினர்‘ |
|
திருமதி. P. கீதா நடராஜன், எண்.9/174, மாரப்பகவுண்டன் புதூர், காவிலிப்பாளையம் அஞ்சல், நம்பியார் வட்டம், ஈரோடு மாவட்டம். |
உறுப்பினர் |
|
திருமதி. . P . சீதாபதி, எண்.3E. பங்களத்தூர் கிராம் மற்றும் அஞ்சல், திண்டிவனம் வட்டம், விழுப்புரம் மாவட்டம். |
உறுப்பினர். |
|
திருமதி. M.S.K. பவானி ராஜேந்திரன், எண்.32, வடக்கு கார் தெரு, இராமநாதபுரம் மாவட்டம். |
உறுப்பினர். |
|
திருமதி. R. ராணி, எண்.552, திருவாசகமணி தெரு, கே.கே. நகர், திருச்சிராப்பள்ளி மாவட்டம். |
உறுப்பினர் |
|
திருமதி. K. சிவகாமசுந்தரி, சட்டமன்ற உறுப்பினர் |
உறுப்பினர் |
|
திருமதி. M. வரலட்சுமி, சட்டமன்ற உறுப்பினர் |
உறுப்பினர் |






