மாநில விருதுகள்

அவ்வையார் விருது

சமூக சீர்திருத்தம், மகளிர் மேம்பாடு, மத நல்லிணக்கம், மொழித் தொண்டு போன்ற பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் மகளிர் ஒருவருக்கு சர்வதேச மகளிர் தினமான மார்ச் 8 ஆம் தேதியன்று ஒவ்வொரு ஆண்டும் அவ்வையார் விருது வழங்கப்பட்டு வருகிறது.

சிறந்த சமூக சேவகர் விருது, சிறந்த சேவை புரிந்த நிறுவனத்திற்கான விருது

பெண்களுக்காக சிறப்பாக பணியாற்றிய சமூக சேவகர் மற்றும் பெண்களுக்காக சிறப்பாக தொண்டாற்றிய நிறுவனத்திற்கும் ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினத்தன்று பதக்கங்களும், சான்றுகளும் வழங்கப்பட்டு வருகின்றன.