மகளிர் உதவி எண் திட்டம்

இந்திய அரசு 181 என்ற குறுகிய குறியீட்டை தமிழ்நாட்டிற்கு மகளிர் உதவி எண்ணாக ஒதுக்கியுள்ளது. வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு பரிந்துரை மூலம் (தகுந்த அலுவலகத்துடன் இணைத்தல்) மற்றும் நாடு முழுவதும் செயல்படுத்தப்படும் பெண்கள் தொடர்பான அரசு திட்டங்கள் பற்றிய தகவல்களை ஒரே சீரான எண் மூலம் 24 மணி நேரமும் உடனடி மற்றும் அவசரகாலப் பதிலளிப்பதை மகளிர் உதவி எண் நோக்கமாகக் கொண்டு செயல்படுகிறது.

தனியார் மற்றும் பொது இடங்களில் வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஒரே இடத்தில் ஒருங்கிணைந்த ஆதரவையும் உதவியையும் வழங்கிட தமிழ்நாட்டில் மகளிர் உதவி எண் நிறுவப்பட்டது. மகளிர் உதவி எண்.-181 யின் மூலம் வழிகாட்டுதல் மற்றும் ஆலோசனை சேகைள் தேவைப்படும் மகளிருக்கு வழங்கப்படுகிறது. தற்போது இம்மையம் ஆம்டெக்ஸ் டவர்ஸ், சிப்காட் தொழில்சார் வளாகம், சிறுசேரி, சென்னை என்ற இடத்தில் இயங்கி வருகிறது.

நோக்கங்கள்:

திட்டத்தின் நோக்கங்கள்:

1.சச்சரவுகளால் பாதிக்கப்பட்ட பெண்கள் கோரும் ஆதரவையும் தகவல்களையும் வழங்கிட இலவச 24 மணிநேர தொலைத்தொடர்பு சேவை புரிதல்.

2.நெருக்கடி மற்றும் நெருக்கடியற்ற தருணங்களில் தலையீட்டை தகுந்த முகமைகளுக்குப் பரிந்துரைப்பதன் மூலம் எளிதாக்குதல்.

3.வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு, அவள் வசிக்கும் அல்லது பணிபுரியும் இடம் சார்ந்த உள்ளூர் பகுதிக்குள் இருக்கும் பொருத்தமான ஆதரவு சேவைகள், அரசு திட்டங்கள் மற்றும் திட்டங்கள் பற்றிய தகவல்களை வழங்குதல்.