சத்யவாணி முத்து அம்மையார் நினைவு இலவச தையல் இயந்திரத் திட்டம் வழங்கும் திட்டம்:
கைம்பெண், கைவிடப்பட்ட பெண்கள், பொருளாதாரத்தில் நலிந்த பிரிவைச் சேர்ந்த பெண்கள், மாற்றுத் திறனாளி ஆண்கள் மற்றும் பெண்கள், சமூக ரீதியாக பாதிக்கப்பட்ட பெண்கள் ஆகியோருக்கு சுய வேலைப்வாய்ப்பு மூலம் வருமானத்தை உயர்த்தும் வகையில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் மூலம் இலவச தையல் இயந்திரம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
இலவச சீருடை வழங்கும் திட்டத்துக்கான துணிகள், சமூக நலத்துறையின் கட்டுப்பாட்டில் செயல்படும் 32 வெட்டும் மையங்களுக்கு ஜவுளி மற்றும் கைத்தறி துறை மூலம் வழங்கப்பட்டு வருகிறது. இம்மையங்களில் வெட்டப்படும் துணிகள், சீருடை தைக்க சம்பந்தப்பட்ட தையல் சங்கங்களுக்கு வழங்கப்பட்டு, தைக்கப்பட்ட சீருடைகள் கல்வித்துறையின் 413 உதவி கல்வி அலுவலர்கள் மற்றும் 67 மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு இந்த சங்கங்கள் மூலம் வழங்கப்படுகிறது






