1982 ஆம் ஆண்டில் சத்துணவுத் திட்டத்தை அறிமுகப்படுத்திய முன்னோடி மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது. மாணவர்களின் சேர்க்கையை அதிகரித்தல், பள்ளிகளில் மாணவர் வருகையை தக்க வைத்தல், , அதே நேரத்தில் குழந்தைகளின் ஊட்டச்சத்து அளவை மேம்படுத்தல் ஆகியவை இத்திட்டத்தின் நோக்கம் ஆகும். பசி அல்லது நோய்வாய்ப்பட்ட குழந்தையால் முழுமையாக ஒருமுகப்படுத்தி படிப்பில் கவனம் செலுத்த முடியாது. இதனை கருத்தில் கொண்டு, அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், சிறப்புப் பயிற்சி மையங்கள், மதராசாக்கள் மற்றும் சர்வ சிக்ஷா அபியான் கீழ் செயல்படும் மக்தாப்களில் பத்தாம் வகுப்பு வரையிலான தொடக்க மற்றும் உயர்நிலை வகுப்புகளில் பயிலும் குழந்தைகளுக்கு சூடான சமைத்த மதிய உணவு இலவசமாக வழங்கப்படுகிறது.
திட்டத்தின் நோக்கங்கள்
1. எல்லோருக்குமான தொடக்கக் கல்வி என்ற நோக்கில் மாணவர் சேர்க்கையை முழு அளவில் அதிகரித்தல் , பள்ளி இடைநிற்றல் விகிதங்களைக் குறைத்தல்.
2.குறைவான உணவு மற்றும் ஊட்டச்சத்து குறைவான குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து வழங்குதல்.
3.பின்தங்கிய நிலையில் உள்ள குழந்தைகளை தவறாமல் பள்ளிக்குச் செல்ல ஊக்குவித்தல் மற்றும் முறையான கல்வியைப் பெற அவர்களுக்கு உதவுதல்.
4.வேலை வாய்ப்புகள் வழங்குவதன் மூலம் பெண்களுக்கு அதிகாரம் அளித்தல்.
திட்டத்தின் முக்கிய அம்சங்கள்
i) 5-9 வயதுக்குட்பட்ட தொடக்கப் பள்ளிக் குழந்தைகளுக்கும், 10-15 வயதுக்குட்பட்ட உயர்நிலைப் பள்ளிக் குழந்தைகளுக்கும், வாரத்தில் ஐந்து நாட்களுக்கு, ஒரு வருடத்தில் 220 நாட்கள் பள்ளி வளாகத்திலேயே சூடான சத்தான கலவை சாதம் மசாலா முட்டையுடன் வழங்கப்படுகின்றது.
ii) 15 மாவட்டங்களில் உள்ள தேசிய குழந்தைத் தொழிலாளர் திட்ட சிறப்புப் பள்ளிகளில் சேர்க்கப்பட்டுள்ள குழந்தைகளுக்கு ஒரு வருடத்தில் 312 நாட்களுக்கு சூடான சத்தான கலவை சாதம் மசாலா முட்டையுடன் வழங்கப்படுகின்றது.
iii) தொடக்கப்பள்ளி குழந்தைகளுக்கு (1வது வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை) ஒரு பள்ளி நாளுக்கு ஒரு குழந்தைக்கு (அரிசி) @ 100 கிராம் மற்றும் உயர் நிலைப் பள்ளி குழந்தைகளுக்கு (6வது வகுப்பு முதல் 10வது வகுப்பு வரை) நாளொன்றுக்கு ஒரு குழந்தைக்கு @ 150 கிராம் வழங்கப்படுகிறது.
iv) அனைத்து 5 வேலை நாட்களிலும் 1 ஆம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரை அனைத்து குழந்தைகளுக்கும் முட்டை வழங்கப்படுகிறது. திருட்டு மற்றும் பழுதடைவதைத் தடுக்க வாரத்தின் ஒவ்வொரு நாளும் முட்டைகளுக்கு வண்ணங்களில், "தமிழ்நாடு அரசு" என்ற முத்திரையிடப்படுகிறது.
v) முட்டை சாப்பிடாத குழந்தைகளுக்கு 100 கிராம் எடையுள்ள வாழைப்பழம் வழங்கப்படுகிறது.
vi) இன்றைய குழந்தைகளுக்கு தேவைப்படும் புரதம் வைட்டமின்கள் மற்றும் கலோரிகளை கருத்தில் கொண்டு 20 கிராம் கருப்பு கொண்டக்கடலை / பச்சைப்பயறு குழந்தைகளுக்கு வழங்கப்படுகிறது.
viii) அனைத்து வெள்ளிக்கிழமைகளிலும் 20 கிராம் வேகவைத்த உருளைக்கிழங்கு மாவுச்சத்து தேவைக்கு துணை புரிகிறது.
ix) குழந்தைகளிடையே அயோடின் மற்றும் இரும்புச்சத்து குறைபாட்டை நிவர்த்தி செய்வதற்கும், சுகாதார தலையீடு திட்டத்தின் ஒரு பகுதியாகவும், இருமுறை செறிவூட்டப்பட்ட உப்பு சமையலுக்குப் பயன்படுத்தப்படுகிறது, இது குழந்தைகளின் அயோடின் குறைபாட்டைத் சீர்செய்து முன் கழுத்து கழலை நோயை தடுக்கிறது. இருமுறை செறியூட்டப்பட்ட வைட்டமின் A மற்றும் வைட்டமின் D சத்துடன் கூடிய எண்ணெய் தினமும் சத்துணவில் பயன்படுத்தப்படுகிறது.
x) முக்கியமான தினங்களில், வெல்லம் மற்றும் நெய்யைப் பயன்படுத்தி குழந்தைகளுக்கு இனிப்புப் பொங்கல் பரிமாறப்படுகிறது.
கலவை உணவுகள் அறிமுகம்
ஒரு சிறப்பு ஊட்டச்சத்து தலையீடாக 2013 ஆம் ஆண்டில் சோதனை திட்டமாக ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு வட்டாரத்தில் 4 வகையான முட்டை மசாலாக்களுடன் 13 வகையான கலவை சாதம் அறிமுகப்படுத்தப்பட்டது. இத்திட்டத்தின் வெற்றியை உறுதிசெய்த பிறகு, 15.8.2014 முதல் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள மற்ற வட்டாரங்களிலும் பல்வகை கலவை சாதம் திட்டம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, இரத்தசோகை எண்ணிக்கை குறைத்திடும் வகையில் உள்ளூரில் கிடைக்கக்கூடிய இரும்புச்சத்து நிறைந்த காய்கறிகளான முருங்கை கீரை, பசலை கீரை, கீரை வகைகளை குழந்தைகளின் ஆர்வம் மற்றும் சுவைகேற்ப மதிய உணவில் பயன்படுத்திட அனுமதித்து சத்துணவு பணியாளர்கள் ஊக்குவிக்கப்படுகிறார்கள்.
|
நாட்கள் |
முதல் மற்றும் மூன்றாவது வாரம் |
இரண்டாவது மற்றும் நான்காவது வாரம் |
|---|---|---|
|
திங்கட்கிழமை |
மிளகு முட்டையுடன் வெஜிடபிள் பிரியாணி |
வெங்காய தக்காளி மசாலா முட்டையுடன் சாம்பார் சாதம் (பிசிபேலாபாத்). |
|
செவ்வாய் |
தக்காளி மசாலா முட்டையுடன் கருப்பு கொண்டைக்கடலை புலாவ் |
மிளகு முட்டையுடன் மீல் மேக்கர் மற்றும் வெஜிடபிள் ரைஸ் |
|
புதன் |
மிளகு முட்டையுடன் தக்காளி சாதம் |
தக்காளி மசாலா முட்டையுடன் புளி சாதம் |
|
வியாழன் |
சாதம், சாம்பார் மற்றும் அவித்த முட்டை |
எலுமிச்சை சாதம், சுண்டல் மற்றும் தக்காளி முட்டை |
|
வெள்ளி |
கறிவேப்பிலை சாதம் / மசாலா முட்டை மற்றும் மிளகாய் வறுத்த உருளைக்கிழங்குடன் கீரை சாதம். |
வறுத்த உருளைக்கிழங்குடன் சாதம், சாம்பார் மற்றும் வேகவைத்த முட்டை. |
ஊட்டச்சத்து நெறிமுறைகள்
<td">22.77
|
வ. எண் |
நிலை |
மத்திய அரசு விதிமுறைகள் |
மாநில அரசு ஏற்பாடு |
||
|---|---|---|---|---|---|
|
கலோரிகள் (Kcl இல்) |
புரதம் (கிராமில்) |
கலோரிகள் (Kcl இல்) |
புரதம் (கிராமில்) |
||
|
1 |
தொடக்கப்பள்ளி |
450 |
12 |
557 |
18.92 |
|
2 |
உயர் தொடக்கப்பள்ளி |
700 |
20 |
735 |
|
பயிற்சி
சத்துணவுத் திட்ட பணியாளர்கள் அனைவருக்கும், சமையல் கலைஞர் தாமோதரன் தலைமையில் சென்னையைச் சேர்ந்த 20 சமையல் கலைஞர்கள் மூலம் பல்வகை கலவை உணவுகளை தயாரிப்பதற்கான பயிற்சி அளிக்கப்பட்டது. சத்துணவு பணியாளர்களுக்கு தமிழ்மொழியில் கையேடுகள் அச்சிடப்பட்டு விநியோகிக்கப்பட்டுள்ளன. சமையல் உதவியாளர்களுக்கான ஒரு நாள் பயிற்சியில் உணவு பாதுகாப்பு முறைகள், தன் சுத்தம், உணவு தயாரிப்பு, ஆர்வம் எற்படுத்துதல் போன்ற தலைப்புகள் உணவு பாதுகாப்பு அலுவலர், மருத்துவர், தீயணைப்பு துறையினர், எரிவாயு நிறுவனத்தினர் மற்றும் துறை அலுவலர்களால் வகுப்பு நடத்தப்படுகின்றன.
உணவு தானிய மேலாண்மை
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் மூலம் அரிசி, பருப்பு, எண்ணெய் மற்றும் உப்பு ஆகியவற்றை சத்துணவு மையங்களின் வாசலில் தரம் மற்றும் அளவை உறுதி செய்யும் வகையில் வழங்கப்படுகிறது.
தடங்கலின்றி உணவை வழங்க சத்துணவுத் மைய அளவில் 45 நாட்கள் காப்பு இருப்பு பராமரிக்கப்படுகிறது.
நிதி மேலாண்மை
சத்துணவு அமைப்பாளர்கள் தங்கள் வங்கிக் கணக்கில் மின்னனு பண பரிவர்த்தனை மூலம் முன்பணமாக பெறப்பட்ட தொகையை பயன்படுத்தி உள்ளூரிலேயே காய்கறிகள் மற்றும் மளிகைப் பொருட்களை வாங்க அனுமதிக்கப்படுகிறார்கள்.
உணவு தயாரிப்பு செலவு (வேலை மற்றும் நிர்வாகக் கட்டணங்கள் தவிர்த்து) மத்திய அரசால் வழங்கப்படுகிறது. இருப்பினும், குழந்தைகளுக்கு சத்தான உணவை வழங்கிட மாநில அரசின் கட்டாய பங்கு 40% ஐ விட அதிகமாக வழங்கப்படுகிறது.
<td">7.45
|
வகுப்பு |
MDM விதிமுறைகள் (60:40) |
ஒன்றிய 60% |
மாநிலம் 40% |
கூடுதல் மாநில பங்களிப்பு |
மொத்தம் |
|---|---|---|---|---|---|
|
தொடக்கப்பள்ளி (1-5 வகுப்பு) |
4.97 |
2.98 |
1.99 |
3.57 |
8.54 |
|
அப்பர் பிரைமரி(6-8 வகுப்பு) |
4.47 |
2.98 |
1.20 |
8.65 |
|
|
9வது & 10வது |
மாநில அரசின் 100% பங்களிப்பு |
10.28 |
|||
உள்கட்டமைப்பு & வசதிகள்
சமையலறையுடன் கூடிய வைப்பறை கட்டுமானம்
சமையலறையுடன் கூடிய வைப்பறை கட்டுவதற்கான தொகை மாவட்ட ஆட்சியர்களுக்கு வழங்கப்பட்டு இப்பணி மேற்கொள்ள மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைக்கு பகிர்ந்தளிக்கப்படுகிறது. சமையலறையுடன் கூடிய வைப்பறை கட்டுவதற்கான வடிவ திட்ட அமைப்பு மற்றம் பணிக்கான தொகை விவர அட்டவணை ஒவ்வொரு ஆண்டும் ஊரக வளர்ச்சி துறை ஆணையர் அவர்களால் நிர்ணயிக்கப்படுகிறது.
சத்துணவு மையங்களின் நவீனமயமாக்கல்
சத்துணவு மையங்களில் ‘புகை இல்லாத சூழலை’ உருவாக்கும் வகையில், சத்துணவு மையங்கள் நவீனமயமாக்கப்பட்டு, மாநில நிதியில் இருந்து தனிப்பட்ட ஒதுக்கீடு செய்யப்பட்டு மையங்களுக்கு எரிவாயு அடுப்பு மற்றும் இணைப்பு வழங்கப்படுகிறது.
சமையலறை சாதனங்கள்
சத்துணவு மையங்களில், சமையலுக்கு தேவையான மூடியுடன் கூடிய அலுமினியம் டபரா, துருப்பிடிக்காத ஸ்டீல் கரண்டி, இண்டோலியம் கடாய் போன்ற போதுமான சமையலறை சாதனங்கள் வழங்கப்பட்டுள்ளன. சத்துணவு பயனாளிகளுக்கு துருப்பிடிக்காத ஸ்டீல் தட்டுகள் மற்றும் டம்ளர்கள் மாநில மற்றும் மத்திய நிதியிலிருந்து வழங்கப்படுகின்றன.
பல்வகை கலவை உணவு தயாரிப்பு முறையை எளிதாக்க, அனைத்து சத்துணவு மையங்களுக்கும் அரைப்பான் (Mixie) வழங்கப்பட்டுள்ளன.
உணவு மாதிரி பரிசோதனை
சமைத்த உணவு 500 கிராம் உணவு பாதுகாக்கும் அடைப்பானில் சேகரிக்கப்பட்டு 2 மணி நேரத்திற்குள் ஆய்வுக் கூடத்தில் சேர்வதை உணவு பாதுகாப்பு அலுவலர்கள் உறுதி செய்கிறார்கள். மாதந்தோறும் வெவ்வேறு வட்டார சத்துணவு மையங்களிலிருந்து 2 அல்லது 3 மாதிரிகள் எடுக்கப்பட்டு அதற்கான ஆய்வு அரசு உணவு ஆய்வு கூடங்களில் மட்டுமே செய்யப்படுகின்றன.
வழிகாட்டி நெறிமுறைகளை பின்பற்றுதல் மற்றும் உணவு தரம் உறுதி செய்தல்
பள்ளி தலைமையாசிரியர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர்கள் சத்துணவு மையங்களை முறையாக ஆய்வு செய்து கருத்துக்களை ஒவ்வொரு மையத்திலும் பராமரிக்கப்படும் ஆய்வு குறிபேட்டில் பதிவு செய்கின்றனர். 1800 – 425 – 8971 என்னும் கட்டணமில்லா தொலைபேசி அறிமுகப்படுத்தப்பட்டு அதில் பெறப்படும் புகார்கள் மீது மாவட்ட அலுவலர்களால் உடனடி நடவடிக்கை எடுக்கப்படுகிறது. www.middaymeal.tn.gov.in என்ற இணையதளம் வழியாகவும் புகார்கள் பதிவு செய்யப்படுகிறது மற்றும் இத்திட்டம் குறித்து மேலும் விவரங்கள் வழங்கப்படுகிறது.
தகவல் பலகைகள்
எதிர்பாரா நிகழ்வு நிதியின் கீழ் அனைத்து சத்துணவு மையங்களிலும் தேவையான முக்கியமான தொலைபேசி எண்கள் வைக்கப்பட்டுள்ளன.
-
ஒவ்வொரு சத்துணவு மையத்திலும் இத்திட்டத்தை செயல்படுத்த ஒரு அமைப்பாளர், ஒரு சமையல்காரர் மற்றும் ஒரு சமையலர் மற்றும் ஒரு சமையல் உதவியாளர் பணியமர்த்தப்பட்டுள்ளனர். சத்துணவு ஊழியர்களுக்கு பகுதி நேர நிரந்தரப்பணியாளர்கள் என ஊதியம் வழங்கப்படுகிறது. அவர்களின் ஊதியம் அந்தந்த ஊழியர்களின் வங்கிக் கணக்கில் மின்னணு பண பரிவர்த்தனை மூலம் வரவு வைக்கப்படுகிறது.
-
மேலும் அவர்களுக்கு பண்டிகை முன்பணமும் வழங்கப்படுகிறது.
-
ஓய்வு பெற்ற சத்துணவு பணியாளர்கள் அனைவருக்கும் மாத ஓய்வூதியமாக ரூ. 1500/-.
-
ஓய்வு காலத்தில் அமைப்பாளருக்கு ரூ. 60,000/- மற்றும் சமையல் & சமையல் உதவியாளர் ரூ. 25,000/- ஒட்டுமொத்த தொகையாக வழங்கப்படுகிறது. மேலும் ரூ. 10,000/- சிறப்பு வருங்கால வைப்பு நிதியாக வழங்கப்படுகிறது.
-
ஆசிரியர் தேர்வு வாரியத்தால் தகுதியான அமைப்பாளர்களுக்கு சிறப்புத் தேர்வு நடத்தப்பட்டு பள்ளிகளில் ஆசிரியர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.
-
அனைத்து வகை சத்துணவு ஊழியர்களும் வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளனர். அரசு தரவு மையம் மூலம் கணக்கு எண்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
-
பணியில் இருக்கும் போது இறக்கும் சத்துணவு ஊழியரின் சட்டப்பூர்வ வாரிசுக்கு கருணை அடிப்படையில் பணி நியமனம் வழங்கப்படுகிறது.
மாநில அளவிலான வழிகாட்டுதல் மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம்






