குடும்ப வன்முறையால் பாதிக்கப்படும் பெண்கள், குழந்தைகள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்கு ஒவ்வொரு ஆலோசனை மையத்திலும் உள்ள இரண்டு தகுதிவாய்ந்த ஆலோசகர்கள் மூலம் ஆலோசனை வழங்கி உரிய துறைகளுக்கு பரிந்துரை செய்திட சென்னை, திருவள்ளூர், திருவாரூர், விழுப்புரம் மற்றும் சிவகங்கை ஆகிய 5 மாவட்டங்களில் தன்னார்வ தொண்டு நிறுவனங்களால் மாநில அரசின் நிதியுதவிடன் குடும்ப ஆலோசனை மையங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.






