தமிழ்நாடு ஒரு துடிப்பான வளர்ச்சிக் கட்டத்தில் உள்ளது, மாநில அரசு, பெண்கள் மற்றும் குழந்தைகளின் வளர்ச்சிக்கு சிறப்பு முக்கியத்துவம் அளித்து அவர்களின் இன்னல்களை சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை மூலமாக பல கட்டமாக நிவர்த்தி செய்கிறது.
தற்போது சமீபத்திய செய்திகள் கிடைக்கவில்லை

1992 ஆம் ஆண்டு அப்போதைய மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் அறிமுகப்படுத்தப்பட்ட முதலமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டம், பெண் குழந்தைகளின் நலனுக்கான முன்னோடி மற்றும் பாதையை மாற்றிமைக்கும் திட்டமாகும்.

1982 ஆம் ஆண்டில் சத்துணவுத் திட்டத்தை அறிமுகப்படுத்திய முன்னோடி மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது. மாணவர்களின் சேர்க்கையை அதிகரித்தல், பள்ளிகளில் மாணவர் வருகையை தக்க வைத்தல், , அதே நேரத்தில் குழந்தைகளின் ஊட்டச்சத்து அளவை மேம்படுத்தல் ஆகியவை இத்திட்டத்தின் நோக்கம் ஆகும்.
நமது மாண்புமிகு முதலமைச்சரால் அறிவிக்கப்பட்ட வேறு சில திட்டங்கள் பின்வருமாறு.