பணிபுரியும் பெண்கள் விடுதிகள்

நகர்ப்புறங்களில் வேலைவாய்ப்புக்கான புதிய வாய்ப்புகள் உள்ளதால் பல இளம் பெண்கள் தங்கள் வீடுகளை விட்டு நகரங்களுக்கு வேலைக்கு செல்ல ஆர்வம் கொள்கின்றனர். விலைவாசி உயர்வு மற்றும் அதிக வாடகை காரணமாக அன்றாட வாழ்க்கைச் செலவு அதிகரித்துள்ளது. ஏழை மற்றும் நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்த பெண்கள், தங்களுக்குக் கிடைக்கும் சொற்ப வருவாயைக் கொண்டு, பணி நிமித்தம் புதிய இடங்களில் செலவுகளைக் சமாளிப்பது கடினம் ஆகும். இதுபோன்ற பணிபுரியும் பெண்களுக்கு உதவும் வகையில், அரசு 28 பணிபுரியும் மகளிர் விடுதிகளை நடத்தி வருகிறது.

சென்னையில் மாதம் ரூ.25,000 மற்றும் பிற இடங்களில் ரூ 15,000 வரை சம்பளம் பெறும் பெண்கள் இந்த பணிபுரியும் பெண்கள் விடுதிகளில் சேர தகுதியுடையவர்கள். சென்னையில் மாதம் 300 ரூபாயும், மற்ற இடங்களில் 200 ரூபாயும் வாடகை செலுத்த வேண்டும். உணவு செலவுகள், மின்சாரம் மற்றும் பிற கட்டணங்களுக்கு பகிர்வு முறை பின்பற்றப்படுகிறது. ஊழியர்களின் சம்பளம் அரசால் வழங்கப்படுகிறது.