குறுகிய கால தங்கும் இல்லம் (ஸ்வதார் கிரேஹ்)

இக்கட்டான சூழ்நிலையில் உள்ள பெண்களுக்கு மறுவாழ்வு அளிக்கும் நோக்கத்தோடு தங்குமிடம், உணவு, உடை, ஆலோசனை, பயற்சி, மருத்துவம் மற்றும் சட்ட உதவி போன்றவை தன்னார்வ தொண்டு நிறுவனங்களால் நடத்தப்படும் 35 குறுகிய கால தங்கும் இல்லங்கள் ஒன்றிய மற்றும் மாநில அரசுகளுக்கிடையே முறையே 60:40 என்ற நிதி பங்களிப்பில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஒரு குறுகியால இல்லத்தில் 30 பெண்கள் மற்றும் 12 வயதுக்குட்பட்ட ஆண் குழந்தைகள், 18 வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகளுடன் அதிகபட்சமாக 5 ஆண்டுகள் வரையிலும், தங்கலாம். 60 வயதிற்குமேற்பட்ட பெண்கள் முதியோர் இல்லங்களுக்கு மாற்றப்படுவர்.