மருத்துவமனை

தொண்டு நிறுவனங்கள் நடத்தும் முதியோர் இல்லங்கள்

மாநில அரசு நிதியின் கீழ் அரசு சாரா நிறுவனங்களால் நடத்தப்படும் முதியோர் இல்லங்கள்

60 வயதுக்கு மேற்பட்ட ஆதரவற்ற முதியோர் மற்றும் வீடற்ற மற்றும் குடும்பத்தினரால் கைவிடப்பட்ட முதியோர்களின் வாழ்க்கையைப் பாதுகாத்திட மாநில அரசு தன்னார்வ தொண்டு நிறுவனங்களால் நடத்தப்படும் முதியோர் இல்லங்களுக்கு பராமரிப்பு மானியம் வழங்கி வருகிறது. இந்த இல்லங்களில் தங்கியுள்ள பயனாளிகளுக்கு உணவு, தங்குமிடம், உடை, சுகாதாரம் மற்றும் பொழுதுபோக்கு வசதிகள் போன்றவை வழங்கப்படுகின்றன.

முதியோர் இல்லங்களை நடத்துவதற்கு 21 அரசு சாரா நிறுவனங்களுக்கு மாநில அரசால் 5:1 என்ற நிதி பங்களிப்பில் மானியம் வழங்கப்படுகிறது. ஒவ்வொரு இல்லத்திலும், 40 முதியோர் தங்கி பயன்பெறலாம். ஒரு முதியோருக்கு மாதம் ஒன்றுக்கு ரூ.1,200/- உணவு மானியமாக வழங்கப்படுகிறது..